Wednesday, May 12, 2010

ரமணர்-7



ஸ்ரீரமண மகரிஷி--5

தநயன் நிலையை தாய் அறிவதுசுவாமிகள் திருவண்ணாமலையில் இருப்பது விரைவில் நாடெங்கிலும் பரவி மதுரைக்கும் எட்டிவிட்டது.ஆராதனை செய்ய முற்பட்ட பக்தரான திருவண்ணாமலைத் தம்பிரான் மதுரையிலுள்ள ஒரு மடத்தில் சுவாமிகளின் மகிமையைப் பற்றிப் பிரசங்கம் செய்தார்.இதைக்கேட்ட பையன் ஒருவன் உறவினர்களிடம் ஓடிப் போய்," நமது வேங்கடராமன், திருவண்ணாமலையில், ஒரு சாமியாராய் இருக்கிறானாம்" என்று கூறினான். சுவாமிகளின் சிறிய தந்தையான நெல்லையப்பையர் உடன் திருவண்ணாமலைக்குக் கிளம்பினார். அப்போது ஒரு மாந்தோப்பில் சுவாமிகளின் வாசம்
அந்நியர்களை அதிகமாக அங்கே அனுமதிப்பதில்லை. நெல்லையப்பரும் ஒரு சீட்டைக் கொடுத்தனுப்பினார். உள்ளே சென்றதும் அவர் கண்ட காட்சி அவர் மனத்தை உருக்கியது. பாலிய மைந்தனது மேனி அழுக்கடைந்து கிடந்தது.

தலையிலே புதர் போல் மயிர்; கையில் வளர்ந்த நகங்கள். ஆனாலும் நெல்லையப்பர் மனத்தைத் தேற்றிகொண்டார். தங்கள் குடும்பத்தான் ஒருவன் இவ்வளவு உயர்ந்த ஞான நிலையை அடைந்ததைப் பற்றி அவருக்குத் திருப்திதான். ஆனாலும் ஊருக்குத் திரும்பி வந்து தங்கள் பக்கத்தில் இருக்குமாறு அவர் சுவாமிகளை வேண்டிக்கொண்டார்; சுவாமிகளுடைய சௌகரியங்களைக் குறைவில்லாது கவனிக்க அது ஏதுவாகும் என்றும் கூறினார்.
ஆனால் சுவாமிகளிடமிருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை. அவரது அருட் பார்வையில் கூட எவ்வித மாறுதலும் தோன்றவில்லை. ஆளையாவது நேரில் பார்த்தோமே என்ற திருப்தி அவருக்கு. பையன் இனிமேல் ஊருக்குத் திரும்புவது கஷ்டம் என்று சுவாமியின் தாயாரான அழகம்மையிடம் அறிவித்தார்.

பெற்ற தாயின் மனம் அவ்வளவு எளிதில் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளுமா? தாயின் வருகை மூத்த பிள்ளை நாகசாமிக்கு லீவு கிடைத்தவுடன் தாயும் அண்ணனும் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டனர். அங்கே பவழக் குன்றில் உள்ள ஒரு பாறையின் மீது சுவாமி படுத்திருந்தார். பார்வைக்கு எவ்வளவோ மாறுதல் அடைந்திருந்த போதிலும் தன் அருமைக் குழந்தையென்பது அன்னைக்கு உடனே தெரிந்துவிட்டது. நெல்லையப்பருக்குக் கிடைத்த பதில் தான் அன்னைஅழகம்மைக்கும் கிடைத்தது. நாள் தவறாமல் அண்ணனும் அம்மையும் சுவாமியை அடுத்து விடாப் பிடியாக வேண்டினர்.
அவர் மனத்தைக் கலைக்க எவ்வளவோ முயன்றனர். அன்னையின் அன்பு முழுவதும் வெளிப்பட்டது.: அழுதார்;அரற்றினார்;வேண்டினார்; இறைஞ்சினார். ஒன்றும் பலிக்கவில்லை. எதற்கும் நிச்சலமான ஒரு மௌனம்!பக்கத்திலுள்ளவர்களுக்கு இது மிகவும் பரிதாபக் காட்சியாக இருந்தது. அன்னையின் அன்பு அவர்கள் மனத்தைக் கரைத்தது.பெறெடுத்த தாய்க்கு மறுமொழியாவது கொடுக்கும்படி அவர்களும் சேர்ந்து மன்றாடினார்கள்.

கடைசியில் சுவாமி ஒரு கடிதத்தில் பின்வறுமாறு எழுதிக் கொடுத்தார்:

"அவரவர் பிரரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது; நடப்பது என்ன தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாயிருக்கை நன்று."

இதற்கு மேல் தாய் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை. நாகசாமியின் லீவு முடிந்ததும் இருவரும் மனவருத்தத்துடன் மானாமதுரைக்குத் திரும்பினர். இதன்பின் சுவாமிகள் மலைமேல் பலகுகைகளில் மாறி மாறித் தங்கிவந்தார். விருபாக்‌ஷிக் குகையிலிருந்தபோது அந்த மடத்துத் தலைவர் சுவாமியைப் பார்க்க வருபவர்களுக்கு டிக்கட் வைத்துப் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கவே அதையும் விட்டுக் கிளம்பிப் பக்கதிலிருந்த ஒருவெளியிடத்தில் தங்கினார். அப்போதும் டிக்கட் நின்றபாடில்லை.கடைசியில் அந்தப் பிரதேசத்தையே நீத்து தொலைவில் உள்ள மற்றோர் குகையை நாடிச் சென்றார்.

இதற்குள் டிக்கட்டு வைத்த பக்தர் தன் தவற்றை உணர்ந்து மன்னிக்கும்படி மன்றாடவே சுவாமியும் கருணை கூர்ந்து திரும்பினார். ஆனால் கோடை காலத்தில் விருபா?க்‌ஷிகுகையில் வெயிலின் கொடுமை வெகு உக்கிரமாகத் தாக்கிற்று. ஆள் இருக்க முடியாதாபடி உருக்கிற்று. ஆகவே அதைவிட்டு நீங்கி முலைப் பால் திர்த்தத்திற்கு அருகேயுள்ள மாமரக்குகைக்கு மாறவேண்டியதாயிற்று. விருபாக்‌ஷி குகையிலிருந்த போது உள்ளம் மலர்ந்துதெய்வீக பக்தி ததும்பும்' அருணசல அக்‌ஷரமாலை' என்னும் திவ்விய பாடலை அருளினார். சுவாமிகளை அடுத்துள்ள அடியார்கள் பிக்‌ஷைக்காக ஊர்க்குள் செல்லும் போதெல்லாம் இப்பாடல்களைப் பாடி வருவாராயினர்.

No comments:

Post a Comment