Wednesday, May 12, 2010

ரமணர்-6




பால யோகி - பாகம் 4

வெளியே வந்ததும், ஊரின் கீழ்க்கோடியிலுள்ள ஐயன் குளத்தருகே சென்று கீமூரில் கிடைத்த ப?ணங்கள் பொட்டலதை எடுத்து."இந்தக் கட்டைக்குத் தின்பண்டங்கள் எதற்கு?" என்று கூறிக்கொண்டே எறிந்து விட்டு நடந்தார். "முடி எடுக்கவேண்டுமா?" என்று வழியில் யாரோ ஒருவர் கேட்கவே, இதுவும் செய்ய வேண்டியது தான் என்று தீர்மானித்தார்.அழகிய குடுமி அன்றோடு ஒழிந்தது. அணிந்திருந்த ஆடையை அவிழ்த்து ஒரு பீனத்திற்கான துண்டைமட்டும் கிழித்துக் கொண்டு, மற்றதையெல்லாம் சுருட்டி, பூணூலையும் மிச்சமிருந்த ரூபாயையும் சேர்த்துத் தூர எறிந்தார். Sநானம் செய்வது கூட அவசியம் என்று தோன்றவில்லை. நேரே கோவிலுக்குள் திரும்பிப் போகும் முன்னமேயே, திடிரென்று கனத்த மழை பெய்வித்து, அருணாசலேஸ்வரர் அவரை ஸ்நானம் செய்வித்தார். நேரே ஆயிரக்கால் மண்டபத்திற்குள் சென்று அவர் தவத்தில் ஆழ்ந்தார்.

ஆனால் வெகு நாள்வரை அங்கிருக்கமுடியவில்லை. பால சந்நியாசியின் இளமையும் மௌன விரதமும் பலருக்கும் ஆச்சர்யத்தை விளைவித்தன. அவர் யார், எந்த ஊர், ஏன் இக்கோலம் முதலிய விவரங்களை அறிய ஆவல் கொண்டனர். இது தவிர, வி"மக்கார சிறுவர்களின் தொந்தரவும் அதிகமாயிற்று. ஆகவே, அவர் தனிமையான ஓர் இடத்தை நாடினார். கோவிலிலே பாதாளலிங்கம் என்ற ஓர் இருட்டுக் குகையைக் கண்டார்.பட்டப் பகலில் கூட அதற்குள் செல்ல எல்லோருக்கும் பயம். ஆனால் பால சந்நியாசி பாதாள லிங்கத்தையே தெரிந்தெடுத்துத் தனிமையான தவயோகத்தில் ஆழ்ந்தார். அங்கே எத்தனை தினங்கள் தவங்கிடந்தனரோ ஒருவருக்கும் தெரியாது. பிறகு ஒரு நாள் பால சந்நியாசி அங்கிருப்பது எப்படியோ வெளியாயிற்று. அந்த யோக நிலைக்காட்சி கண்டோரை வியக்கச் செய்தது. பூர்வம், வான்மீக முனிவர் தம்மைச் சுற்றிலும் கரையான் புற்றுக்கள் மூடிக் கொண்டதையும் உணராது வருடக் கணக்காகத் தவம் செய்ததாகக் கூறுவர். பால யோகியின் தவ நிலையும் அதை ஒத்திருந்தது. பாதாள லிங்கத்தின் இருட்டிலேயே குடியிருந்த ஈ, எறும்பு, பூச்சிகளுக்கு யோக நிலையில் இருந்தவர் உடம்பு சரியான இரையாகக் கிடைத்தது.

உடம்பின் கீழ்ப் பாகம் பூச்சி அரித்து, ரத்தமும் சீழும் சேர்ந்து உறைந்து கட்டிக் கிடந்தது. ஆனால் அந்த பால சந்நியாசிக்கு இதனால் எவ்விதத் துன்பமும் நேர்ந்ததாகத் தெரியவில்லை. ஆனந்த நி?டையில் அசையாது வீற்றிருந்தார். இந்தக் கா?¢யைக் கண்டோர் அனைவரும் பிரமித்துப் போயினர். பால சந்நியாசியின் தவ வலிமையை நிதரிசனமாக உணர்ந்த சாதுக்கள் அதுமுதல் அவரை மிகவும் மரியாதையாகக் கவனித்து வருவாராயினர். ஆயினும் பால யோகி அடிக்கடி இடம் மாறிக்கொண்டே இருந்தார். , சுப்பிரமணியர் கோவிலருகே சில காலம் இருந்தார். அதன் பக்கத்திலிருந்த பூந்தோட்டத்தில் சில நாட்கள்; இதன் பின் வாகன மண்டபத்தில் சில நாட்கள்; கடைசியாக மங்கை பிள்ளயார் கோவிலை அடைந்தார்.

பால சந்நியாசியின் மகிமையை உணர்ந்த உத்தண்டி நயினார் என்னும் சாது, இச்சமயத்தில் சுவாமிகளையடுத்து உபதேசம் பெறவேண்டி அவருக்குத் தொண்டுசெய்யத் தொடங்கினார். அப்போதும் கூட வி"மிகளின் தொந்தரவு நீங்கவில்லை. நயினார் இல்லாத சமய்ங்களில் துஷ்டப் பிள்ளைகள் பல இடையூறுகள் செய்வதுண்டு. இதைக் கூட அவர் பொருடள்படுத்துவதில்லை.

சுவாமிகளின் பெருமை நாளுக்கு நாள் எங்கும் பரவவே, பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து போவாராயினர். இதனால் துஷ்டர்களின் கொடுமைகள் நின்றன. பக்தர்கள் கூட்டம் பெருகியதால் தியானத்துக்கு இடைஞ்சல் ஏற்படவே சுவாமிகள் அதைவிட்டுப் புறப்பட்டுத் திருவண்ணாமலைக்கு அருகே உள்ள குருமூர்த்தத்தை அடைந்தார். அங்கே ஒன்றரை ஆண்டு காலம் சமாதி நிஷ்டையில் இருந்தார். இங்கே தான் முதன் முதலாக சுவாமிகளின் பூர்வோத்தரம் வெளியாயிற்று. கூட இருந்த பக்தர் ஒருவர் ஒரு நாள் சுவாமிகளுக்கு ஆராதனை செய்ய ஏற்பாடுகள் எல்லாம் செய்தார். ஆனால், ஆராதனைக்குச் சற்று முன், கரியால் எழுதப் பட்டிருந்த சில வார்தைகள் சுவற்றில் காணப்பட்டன. "இதற்குத் தொண்டு இதுவே" என்பது அவ்வாக்கியம். "இது" என்பது பக்தர்கள் கொண்டுவரும் உணவைக் குறிப்பதாகும். இதைக் கண்டபின் ஆராதனை நின்றுவிட்டது என்று சொல்லத் தேவையில்லை. சுவாமிகளுக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்பது இதன் மூலம் தான் வெளியாயிற்று.

இதன் பின்னர் அவ்வூர் தாலுக்கா அலுவலக சிரஸ்தாராக இருந்த ஒரு பக்தர் விடாப் பிடியாக சுவாமிகளின் பூர்வோத்தரத்தை அறிய முயன்றார். அதைத் தெரிவித்தால் ஒழிய, தாம் அவ்விடதைவிட்டு நகருவதில்லையென்று சங்கல்பம் செய்துகொண்டார்.
முடிவில் சுவாமிகள் கீழ்க்கண்டவாறு எழுதிக் காட்டினார். "வேங்கடராமன்,திருச்சுழி" பக்தருக்கு இவ்வூர்ப் பெயர் புரியவில்லை. உடனே உவாமி பக்கத்திலிருந்த பெரிய புராணப் புத்தகத்தை எடுத்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடல்பெற்றதிருச்சுழி என்னும் திவ்ய தலத்தின் பெயரைச்சுட்டிக் காட்டினார்.

No comments:

Post a Comment