
மறுநாள் காலயில் அவர் எழுந்தார். அன்று கோகுலாஷ்டமி தினம். ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி,1896. அருணாசலத்தை நோக்கி மீண்டும் நடைபயில ஆரம்பித்தார். அசதியும் பசிப்பிணியும் வாட்டியது. அங்கிருந்த ஒரு வீட்டின் முன் நின்றார். அந்த வீடு முத்துகிருஷ்ண பாகவதர் என்பவருடைய வீடு. வெளியிலிருந்தே பசிக்கின்றது என்று கேட்டார். பாகவதர் அவரை உள்ளே அழைத்தார். அந்த இல்லத்து மாதரசி அவருக்கு உணவு கொடுத்து கண்ணனே அன்று அவர்கள் வீட்டிற்கு வந்து உண்டதாக நினைத்து இளைய சாதுவை ஆராதித்தார்.
தன் இரு கடுக்கன்களையும் (காதணி) அடகாக பெறுக்கொண்டு தன் யாத்திரைக்கென ரூபாய் நான்கு தரும்படி கேட்டார். சோதித்துப் பார்த்தார் பாகவதர் இருபது ரூபாய் பெறுனமானமுள்ள காதணிகளுக்கு கேட்டபடி ரூபாய் நான்கு கொடுத்தார். ஒரு கடுதாசியில் முகவரி எழுதிக்கொடுத்து எப்போது விரும்பினாலும் வந்து கடுக்கன்களை மீட்டிச் செல்லலாம் என்று
கூறினார்.
வெங்கடராமன் மதியச் சாப்பாட்டினை அவர்கள் வீட்டடிலேயே முடித்துவிட்டுப் புறப்பட்டார். அவருடைய மனைவியார் கோகுலாஷ்டமி இனிப்புத் தின்பண்டங்கள் கட்டிக் கொடுத்தார்.ரயில் நிலையம் சென்று இரவு வண்டியில்லாததால் நிலையத்திலேயே கழித்தார்.
1896 செப்டெம்பர் மாதம் முதல் தேதி திருவண்ணாமலை செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தார். பயணம் சிறியதே. சற்று நேரத்தில் திருவண்ணாமல் நிலையம் வந்தது. ரயிலை விட்டுஇறங்கியவுடன் அருணாச்லேச்வரர் கோயிலை நோக்கி விரைந்தார். கோயில் அவருடைய வருகைக்கென காத்துத் திறந்தே இருந்தது போலும். எவருமே அர்ச்சகர்கள் உட்பட் மக்கள் நடமாட்டமே இல்லை. வெங்கடராமன் வாயிலில் நுழைந்து தந்தை அருணாசலேச்வரர் முன் நின்றார். சொல்லொணா பேரின்ப உணர்ச்சி பெற்றார். காவியப் பயணம் நிறைவுற்றது..
வெங்கடராமன் என்னும் கப்பல் அருணாசலேச்வரர் என்னும் துறைமுகத்தை பத்திரமாக அடைந்தது.
No comments:
Post a Comment