Wednesday, May 12, 2010

ரமணர்-4



தந்தையை நோக்கி - பாகம் 3

மதுரையைவிட்டு வெங்கடராமன் திருவண்ணாமலைக்கு மேற்கொண்ட பயணம் தனித் தன்மை வாய்ந்தது. . மாலையில் அவரது சிற்றப்பா வீட்டினிலிருந்து புறப்பட்டார். அரை மைல் தூரம் உள்ள மதுரை ரயில் நிலையத்துக்கு நடந்தே சென்றார்.ஆனால் அன்று வண்டி அதிர்ஷ்ட வசமாக நிலையத்தினின்றும் தாமதமாகப் புறப்பட்டது. எனவே அவர் பயணம் தடங்கலின்றி அமைந்தது.

ரயில்வே கால அட்டவணையில் மதுரையிலிருந்து திண்டிவனம் செல்வதற்கான வண்டிச் சத்தம் இரண்டு ரூபாய் பதிமூன்று அணா என்பதை அறிந்து கொண்டார். ஒரு சீட்டினை வாங்கிக் கொண்டு மீதம் மூன்று அணாவை வைத்துக் கொண்டார்.விசாரித்திருந்தால் மதுரையிலிருந்து திருவண்ணாமலைக்கு வேறுவழி இருப்புப் பாதை உள்ளது என்பதையும் அதற்கான சத்தம் ரூபாய் மூன்றுதான் என்பது தெரியவந்திருக்கும். வண்டியில் பயணம் செய்யும்போது உடனிருந்த மௌல்வி வாயிலாக திருவண்ணாமலை செல்வதற்கு தனியே பாதை உள்ளது என்றும், அதற்கு திண்டிவனம் செல்லவேண்டியதில்லை என்றும் முன்பாகவே விழுப்புரத்தில் இறங்கி வண்டி மாறவேண்டும் என்றும் கூறினார்.

திருச்சிராப்பள்ளியை வந்தடைந்தபோது இருட்டிவிட்டது. வெங்கடராமனுக்கு பசித்தது. அரையணாவுக்கு மூன்று பழங்கள் வாங்கினார். ஒன்றைச் சாப்பிட்டவுடனேயே வயிறு நிரம்பிய உணவு ஏற்பட்டது. அதிகாலை மூன்றுமணியளவில் வண்டி விழுப்புரத்தை அடைந்தது.

அங்கிருந்து திருவண்ணாமலைக்கு நடந்தே செல்வதாகத் தீர்மானித்தார். விழுப்புரம் நகருக்குள் சென்றார். திருவண்னாமலை செல்லும் பாதையை அறிந்து கொள்ள கைகாட்டியைத் தேடினார். ஒரு கைகாடிப் பலகையில் மாம்பலப்பட்டு என்று காணப்பட்டது. மாம்பலப்பட்டு திருவண்ணாமலை செல்லும் வழியில்தான் உள்ளது என்பதை அவர் அறியவில்லை. அசதியும் பசியும் இருந்ததால் சற்று ஓய்வு எடுக்க நினைத்தார்.

ஒரு உணவு விடுதிக்குச் சென்றார். சாப்பாடு சமைக்க மதியம் வரை ஆயிற்று. உணவு அருந்திவிட்டு இரண்டு அணா தன் சாப்பாட்டிற்கெனத் தரலாமா என்று உரிமையாளரிடம் கேட்டார். “நீ எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்” என்று அவர் திரும்பக் கேட்டார்.”என்னிடம் இரண்டரை அணா” என்று வெங்க்ட்ராமன் சொன்னார். பணம் ஏதும் தரவேண்டாம் என்று சொல்லிவிட்டார் உரிமையாளர். அவர் மாம்பலப்பட்டு திருவண்ணாமலலை செல்லும் வழியில்தான் உள்ளது என்று விளக்கினார். வெங்கடராமன் மீளவும் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்து கைவசம் உள்ள பணத்திற்கு மாம்பலப்பட்டுவரை மட்டுமே சீட்டு வாங்கிக் கொண்டார்.

மாம்பலப்பட்டு ரயில் நிலையத்தில் இற்ங்கினார். . அங்கிருந்து கால் நடையாகவே திருவண்ணாமலை செல்லும் வழியில் நடந்தார். ப்த்து மைல்கள் நடந்தபின் அரையாணி நல்லூர் கிராமத்திற்கு வந்தார். அங்கே சிறிய குன்றின் மீது ஒரு கோயில் தென்பட்டது. அந்தக் கோயிலை நோக்கி நடந்து நுழைவாயில் கதவுகள் திறப்பதற்காகக் காத்திருந்தார். நடை திறந்தபின்னர் கோயிலின் பிரகாரத்தில் ஒரு தனியிடத்தில் அமர்ந்தார். அங்கே அவருக்கு ஒரு அற்புதமான சுகானுபவம் ஏற்பட்டது. கோயில் முழுதும் எல்லா இடத்திலும் கண் கூசும் பிரகாசமான ஒளிவெள்ளம் தென்பட்டது.

அந்த வெண்மை ஒளி வந்ததைப் போன்றே சிறிது நேரத்தில் மறைந்தது. வெங்கடராமன் ஆழ்ந்த தியான நிலையில் மூழ்கியிருந்தார். நேரம் போனதே தெரியாமல் அவர் மோன நிலையில் இருந்தார். நடை சாத்தும் நேரம் வந்ததும் வெங்கடராமனை எழுப்பினார்.கோயில் அர்ச்சகர் மூன்றுகல் தொலைவில் உள்ள கிலூர் (திருக்கோவலூர் வீரட்டம்) பூஜைக்கு அவர் செல்ல வேண்டியிருந்ததால் பணியாளர்கள் புறப்பட முற்பட்டனர்.

வெங்கடராமனும் அவர்களைப் பின்தொடர்ந்து அந்தக் கோயிலுக்குச் சென்றார். அங்கும் அவர் சகஜ சமாதி நிலை அடைந்தார். பூஜை முடிந்தபின்னர் அவர்கள் மீளவும் அவரை உணர்வு நிலைக்கு எழுப்பினர்.ஆனால் அவருக்கு எவரும் உணவு அளிக்க முன்வரவில்லை. அர்ச்சகர்களின் போக்கைக் கண்டித்து மேளகாரர் தன் பங்கு உண்டைக்கட்டியினை ( பச்சையரிசிச் சாதம் உருண்டை அச்சில்) கொடுத்தார். தாகவிடாய் ஏற்பட்டபோது சற்று தூரத்தே உள்ள ஒரு சாஸ்த்ரி வீட்டிற்கு சென்று நீர் பெற்றுக் கொள்ளுமாறு கூறினர்.

அந்த சாஸ்த்ரிகள் வீட்டினை நெருங்கும் போது வெங்கடராமன் மயக்கமுற்று வீழ்ந்தார். அக்கம் பக்கத்தினர் நீர் தெளித்து அவரை ஆசுவாசப் படுத்தினர். அந்தகூட்டத்தைப் பார்த்துவிட்டு அவர் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தார்.

No comments:

Post a Comment