Wednesday, May 12, 2010

ரமணர்-3


ஆத்மானுஸந்தானம் - பாகம் 2

இந்த அனுபவம் அரை மணிக்குள் நடந்தேறிவிட்டது. மரண பயம் பறந்து போய்விட்டது. அவரது மனம் ஆத்ம தியானத்தில்ஆழ்ந்து, படிப்பைச் சிறிதும் நாடவில்லை. வீட்டில் உள்ளவர்களை நினைக்கவில்லை.விளையாட்டுத் தோழர்களையும்மறந்தார். விளையாடலும் சண்டையும் மறைந்தன. எதிலும் பற்றில்லை.சாந்தமும் வணக்கமும் நிறைந்தவரானார். உணவைப்பற்றிச் சிறிதும் கவலை இல்லை. நல்லதோ, கெட்டதோ கிடைத்ததை ருசி, மணம் ஒன்றையும் கவனியாமல் சாப்பிடலானார்.

கோவிலுக்குப் போவதிலே புதிய ஸ்ரத்தை ஏற்பட்டது. இதற்கு முன்னமெல்லாம், எப்போதாவது, ஸ்ரீ மீனாக்ஷ¢யம்மன் சந்நிதிக்குப் போவதென்றால் தமாஷாக, சினேகிதர்களுடன் போய்வருவது வழக்கம். ஆனால் இப்போது அப்படியில்லை! நாள்தவறாது, தனியே கோவிலை அடைந்து அம்மன், சுவாமி, நடராஜர், அறுபத்து மூவர் சந்நிதிகளில் நீண்ட நேரம் தொழுதுவிட்டு வருவார். "அறுபத்துமூவரது அன்பைப் போன்று எனது பக்தியைப் பெருக்கி நிலைக்கச் செய்ய அருள் சுரக்குமாறு ஒவ்வோர் சமையம் இறைவனை இறைஞ்சுவேன்.ஆனால் அநேகமாக எதையும் அபேக்ஷ¢த்துப் பிரார்த்திப்பதில்லை. அகக் கடல் பொங்கி அருட்கடலோடு கலக்கும் இந்த ஹிருதய சங்கமத்தினால், கண்களில் நீர் துளிக்கும் அவ்வளவுதான் இன்பதுன்ப உணர்ச்சி ஒன்றும் கிடையது" என்று சுவாமி சந்நிதியில் தான் அடைந்த இன்பத்தை விளக்கியிருக்கிறார்.

அப்பன் அழைப்பு:

இவ்வாறு ஆறு வாரங்கள் கடந்தன. வேங்கடராமனின் மாறுதலைக் கண்ட உறவினர்களுக்கு அது பிடிக்காமலிருந்தது ஆச்சரியமல்ல. படிப்பிலும் கவனம் செலுத்துவதில்லை என்று தெரிந்ததும் வெறுப்பும் கோபமும் கொண்டனர். ஆகஸ்ட் 29-ஆம் தேதி விஷயம் முற்றிவிட்டது.

அன்று வேங்கடராமன் நோட்டுப் புத்தகத்தை வைத்துக்கொண்டு ஒரு பாடம் எழுதிக்கொண்டிருந்தார். ஆங்கில இலக்கணப் புத்தகத்தில் உள்ள ஒரு அத்தியாயத்தை மூன்று முறை திருப்பித் திருப்பி எழுதிக்கொண்டு வரவேண்டும் என்பது ஆசிரியரின் கட்டளை. மூன்றாவது முறையாக எழுதிக்கொண்டிருக்கும் போது, திடீரென்று வெறுப்புணர்ச்சி தோன்றிவிட்டது. புத்தகத்தைகட்டி மூலையில் போட்டுவிட்டு, கண்ணை மூடி தியானத்தில் அமர்ந்தார்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அண்ணா நாகசாமி, தம்பியைப் பார்த்து," இப்படிப் பட்டவனுக்கு இதெல்லாம் என்னத்துக்கு? என்று வெறுப்புடன் இரைந்து கேட்டார். சில நாட்களாகவே இம்மாதிரியான கேள்விகள் வேங்கடராமனுக்கு சகஜமாகி விட்டன. இவற்றையெல்லாம் அவர் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் அன்று மட்டும், அக்கேள்வி
சுருக்கென்று தைத்தது.

" ஆமாம்; வாஸ்தவம் தானே. எனக்கு இங்கு என்னவேலை?" என்று சிந்தனை எழுந்தது. அதே சமயத்தில், சில மாதங்களுக்கு முன்னே கேள்விப்பட்ட அருணாசல திவ்ய §க்ஷத்திரத்தின் நினைவு வந்தது. உடனே இருந்த இடத்தைவிட்டு எழுந்து," பள்ளியில் இன்று ஸ்பெஷல் கிளாஸ்; போய்விட்டு வருகிறேன்", என்று அண்ணனிடம் சொன்னார். "அப்படியானால், கீழே போய், பெட்டியைத் திறந்து, ஐந்து ரூபாய் எடுத்துக்கொண்டு போய் என் காலேஜ் சம்பளத்தையும் கட்டி விட்டுவா ", என்று கூறினார் நாகசாமி. "இதுவும் தெய்வ கடாக்ஷம் தான்" என்று நினைத்துக் கொண்டு வேங்கடராமன் அவ்வாறே ரூபாயை எடுத்துக்கொண்டார். பின்னர் 'அட்லஸ்' புத்தகம் ஒன்றை எடுத்து ரயில் மார்க்கத்தைக் குறிப்பாகப் பார்க்கவே மூன்று ரூபாய் போதும் என்று தோன்றியது. உடனே, ஒரு கடிதமெழுதி, பாக்கி ரூபாய் இரண்டையும் அத்துடன் சேர்த்து, நன்றாகத் தெரியும்படியான ஒரு இடத்தில் வைத்துவிட்டு புகைவண்டி நிலையத்துக்குப் புறப்பட்டார்.

கடிதத்தில் கண்டிருந்ததாவது: "நான் என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பிவிட்டேன். இது நல்ல காரியத்தில் தான் பிரவேசித்திருக்கிறது. ஆகையால் இந்தக்காரியத்திற்கு ஒருவரும் விசனப் படவேண்டாம். இதைப் பார்ப்பதற்காகப் பணச்செலவும் செய்ய வேனாம். உன் சம்பளத்தை இன்னும் செலுத்தவில்லை. ரூ. இரண்டு இதோடுகூட இருக்கிறது. இப்படிக்கு..........."கடிதத்தின் வார்தைகளில் அவரது மனநிலை ஸ்பஷ்டமாகப் பிரதிபலிப்பதைக் காணலாம். "நான்" என்ற ஆரம்பம் சில வரிகளுக்கப்பால், ஏதோ ஓர் அ•றிணை 'இது' வாக மாறி, கடைசியில் கையெழுத்துப் போடுவதற்குக் கூட ஒருவரும் இல்லாமல் மறைந்துவிட, கடிதமும் கையெழுத்தில்லாமலே முடிந்துவிடுகிறது.

No comments:

Post a Comment