
ஆத்மசாக்ஷாத்காரம்.
ஒருநாள் வேங்கடராமன் தனதுசிறிய தந்தை வீட்டு மாடியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். உடலிலே நோய் ஒன்றும் இல்லை. ஆனால் திடீரென்று ஏதோ ஒருவித பயம் உள்ளத்தில் எழுந்தது. தான் மரணத் தருவாயில் இருப்பதாகச் சிறுவருக்குத் தோன்றியது. ஆனால் பெரியவர்கள் எவரிடத்திலும் இதை அவர் சொல்லவில்லை. தன் மனதுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளத் துணிந்தார். பிற்காலத்தில் இதை இவர்விவரிக்கும் போது , மகர்"¢களே பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"திடீரென்று ஏற்பட்ட இச்சம்பவம் என்னைத் தீவிர யோசனையில் ஆழ்த்தியது. 'சரி, சாவு நெருங்கிவிட்டது. சாவு என்றால்என்ன? எது சாகிறது? இந்த உடல் தானே செத்துப்போகிறது?' என்று எனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டு உடனே மரணானுபவத்தை ஏகாக்கிரமாய் பாவித்துப் பார்த்தேன்."
" பிணம் போல விறைக்குமாறு கைகால்களை நீட்டிப் படுத்தேன்.'சரி; இந்த உடம்பு செத்துவிட்டது' என்று உள்ளுக்குள்ளேயேசொல்லிக்கொண்டேன். இதை மயானத்துக்குக் கொண்டு சென்று எரித்துவிடுவார்கள். இது சாம்பராய்ப் போகும்.ஆனால் இந்த உடம்பின் முடிவுடன் 'நானும்' இறந்து விட்டேனா? இந்த உடல் தான் நானா? இந்த உடல் சப்தமற்று, சலனமற்றுக்கிடக்கிறது. ஆனால் இந்த உடலுக்குமப்பாற் கூட 'நான்' என்ற சொரூபத்தின் சக்தியும், தொனியும் ஒலிக்கிறதே! ஆகவே'நான்'தான் ஆத்மா--உடலுக்குள் கட்டுப்படாத ஒரு வSது, என்ற முடிவுக்கு வந்தேன். இதெல்லாம் ஒரு மனத் தோற்றம் அல்ல. நிதர்சனமான உண்மை அனுபவமென்று தெளிவாய் விளங்கிற்று.
நன்றி....நல்ல விளக்கம்....இன்னும் ஆத்மசாக்ஷாத்காரம் பற்றி தெரிவித்தால் மிக நன்றாக இருக்கும்...
ReplyDelete