Wednesday, May 12, 2010

ரமணர்-10

ரமணர் -10
அன்று முதல் எச்சம்மாள் திருவண்ணாமலையிலேயே வசித்து வந்தார். தாம் இருந்தவரைக்கும் முப்பது வருடங்களுக்கு மேலாக, முதலில் சுவாமிகளுக்கு அன்னம் படைக்காமல் இவ்வம்மை சாப்பிட்டதில்லை. இவ்வம்மையின் செல்வமெல்லாம் கைங்கரியத்திலேயே செலவாயிற்று. சுவாமிகள் மலைமேல் வசித்துவந்த காலத்தில் எச்சம்மாளின் வீடு ரமண பக்தர்கள் தங்கும் ஒரு சத்திரமாகவே விளங்கியது. ஞான ராக்கியத்திலே எச்சம்மாள் மிகுந்த முன்னேற்றம் அடைந்தவர். அனேகமாக எப்போதும் தியானத்திலேயே ஆழ்ந்திருப்பார்.




முதல் மேல் நாட்டு பக்தர்



ஐரோப்பியர்களில்முதல் முதலாக சுவாமிகளை நாடி வந்தவர் எப்.எச்.கம்ப்ரீஸ்(HAMBRIS) என்பவரே. 1911-ஆம் ஆண்டு முதல் போலீசு சூப்ரெண்டாக வேலை பார்த்த போதிலும் மிகுந்த மதப்பற்றுள்ளவர். பூர்வப் பிறவியில் தான் ஒரு சித்தர் குழுவில் இருந்ததாக அவருக்கு ஒரு நம்பிக்கை. திரு கம்ப்ரீசு மும்முறை சுவாமிகளைச் சந்தித்து, நடந்த உரையாடல்களை எழுதி இங்கிலாந்தில் உள்ள நண்பர் ஒருவருக்கு அனுப்பினார்.
'இண்டர்நேசணல் சைக்கிக் கெசட்' என்ற பதிரிக்கையில் பிரசுரமாயின. இதன் பிறகு திரு கம்ப்ரீசு தன் வேலையை உதறிவிட்டு கதோலிக்க சந்நியாசி ஆகிவிட்டார். இவர்களின் உரையாடல்களில் சில பாகங்களைக் கீழே காணலாம்:



கம்ப்ரீசு: உலகுக்கு நான் ஏதாவது உதவி செய்யக் கூடுமா? சுவாமி: முதலில் நீ உனக்கு உதவி செய்து கொள்; அதன் மூலம் உலகுக்கே உதவி உண்டு கம்ப்ரீசு: உலகுக்கு சேவை செய்ய நான் விரும்புகிறேன்; செய்யலாம் அல்லவா?


சுவாமி:ஆகா, செய்யலாம்; உனக்கு உதவி செய்வதன் மூலம் உலகுக்கே உதவி செய்தவன் ஆகிறாய். நீ இருப்பது உலகில் தானே? நீ தான் உலகம்; உலகத்தினின்றும் நீ வேறல்ல; உலகமும் உன்னிலிருந்து வேறுபட்டது அன்று.



கம்ப்ரீசு: பெரியோய்! பூர்வம், கிருட்டினன், ஏசு போன்றோர், பல அற்புதங்களைச் செய்தனர். என்னாலும் அவ்வாறுசெய்ய முடியாதா?


சுவாமி: அற்புதங்களை நிகழ்த்திக் காட்டும்போது இவர்களுள் யாராவது இயற்கைக்கு மாறுபட்ட ஆச்சரியங்களைச் செய்கிறோம் என்று உணர்ந்தா செய்தார்கள்?



கம்ப்ரீசு: (சிறிது யோசனை செய்த பின்னர் ) இல்லை. இதன் பின் சித்து விளையாட்டுச் சக்திகளை அடைவதில் ஆசை கொண்டு மோசம் போகாமல் ஆத்ம விசாரத்தின் மூலம் முக்தியடையும் மார்க்கத்தைத் தேடுமாறு அவருக்கு உபதேசித்தருளினார்.


ரமண மகரிஷி - பாகம் 9



முதல் தடவையிலேயே சுவாமிகள் தமது அன்னையிடம் குடும்ப பாசம் அற்றுவிட்டது என்று அறிவித்திட்ட போதிலும் அவ்வம்மையார் அடிக்கடி திருவண்ணாமலைக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். 1914-ஆம் ஆண்டு ஒரு தடவை அன்னை உடல் நலம் குன்றி இரண்டு மூன்று வாரம் படுத்த படுக்கையாய் இருந்தார். அப்போது சுவாமிகள் விருபாட்சக் குகையில் வாசம். வியாதியுற்ற அன்னையை அவர்கள் வெகு அன்புடன் பராமரித்து பணிவிடைகள் செய்தார். குணப்பட்டவுடன் அன்னை மானாமதுரைக்குத் திரும்பிச்சென்றார். ஆனால் வெகு சீக்கிரத்தில் திருவண்ணாமலைக்குத் திரும்பி வரும்படி நேரிட்டது.
1900-ஆம் ஆண்டு அன்னையின் மூத்த புதல்வன் மரனமடைந்தார். மைத்துனரும் காலம் சென்றார். பிரிவினையாகாத ஏழைக்குடும்பம் வறுமையில் சிக்கியது. பின்னர் நாக சுந்தரத்தின் இளமனைவியும் ஓர் ஆண் மகவை விட்டுவிட்டுப் பரகதி அடைந்தாள். இப்படிப்பட்ட பெரும் வியாகூலங்கள் அடுத்தடுத்து ஏற்படவே அன்னையின் மனம் மாறிற்று; வீட்டைத் துறந்து இரண்டாவது புதல்வன் மீது மனம் சென்றது; 1916-ல் மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். கொஞ்ச காலத்திற்குப் பிறகு சுவாமிகள் கந்தாசிரமத்தில் வசிக்கலானார். அது சற்று விசாலமான இடம். இங்கே வந்த பின்னர் அன்னை சமையல் கைங்கரியத்தைத் தாமே மேற்கொண்டு தரிசனத்துக்கு வந்த பக்தர்களுக்கும் அன்னமிடலானார். அதிதிகள் அனைவருக்கும் அன்னம் படைக்கும் வழக்கம் இதன் பின்னரே ஆசிரமத்தில் ஏற்பட்டது.



நாளுக்கு நாள் பக்தர்களின் தொகை அதிகரித்துக் கொண்டே வந்த போதிலும் இவ்வழக்கம் இன்றும் குறைவில்லாமல் நடைபெற்று வருகிறது.



சில நாளைக்கெல்லாம் அன்னையின் விருப்பத்திற்கிணங்க, கடைசிக் குமரனும் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார். அழகம்மையார் 1916- ஆம் ஆண்டில் ஆசிரமத்தில் சாசுவதமாகத் தங்குவதற்கு வந்ததும் பக்தர்கள் பலர் கலக்கம் அடைந்தனர். சுவாமிகளுக்கு இது பிடிக்காமல் போய் திடீரென்று எங்காவது வேறு இடத்திற்கு நடந்துவிடப் போகிறாரே! என்று அஞ்சினர்.



ஆனால் நல்ல வேளையாக இம்மாதிரியான முடிவு ஒன்றும் ஏற்படவில்லை. ஆயினும், கொஞ்ச நாள்வரைக்கும் அன்னைக்கு இடம் பழக வில்லை.



சுவாமிகளின் போக்கு அவருக்கு விசித்திரமாகத் தோன்றியது. பக்தர்களிடம் சுவாமிகள் சகசமாகப் பேசுவார்; ஆனால், தாயிடம் பேசுவதில்லை. அன்னைக்கு இதனால் மனத்தாங்கல் ஏற்பட்டது இயற்கையே.



ஆனால் வெகு சீக்கிரத்திலேயே இதன் அர்தத்தை அழகம்மையார் உணர்ந்து கொண்டார். "ஆசிரமத்திலுள்ள எத்தனையோ பேரில் அன்னையும் ஒருவர், அவ்வளவுதான். அவரின் அன்னை என்பதற்காகத் தனி உரிமைகள் ஒன்றும் அவருக்கு இல்லை" என்ற உண்மை புலப்பட்டது.



இப்படிப் பட்ட சிறு சம்பவங்களைக் கொண்டே தனது மாதாவின் மனத்தைப் பக்குவப்படுத்தி, முழு முக்தியான சமாதி நிலைக்குத் தயாராக்கினார். தனது பேச்சு, மௌனம், நடத்தை ஆகியவை மூலம் தாயின் ஞான வாழ்வைச் செம்மையுறச் செய்தார். அரிய உபதேசங்கள் புரிவார். உண்மை நிறைந்த கதைகளைச் சொல்லுவார்.

No comments:

Post a Comment